நிச்சயம்_முடியாது

ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்.

அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால் அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும்.

உறவுகளிலேயே தாய்க்குதான் முதலிடம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம் காட்டிவிட முடியும்.

வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும்.

உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம்அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும்.

என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும்.

நீங்கள் எந்த விடயத்தை எடுத்தாலும் எமது முஹம்மது (ஸல்) அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம் காட்டிவிடவா முடியுமா?

நிச்சயம் முடியாது.

என் தலைவர் முஹம்மது நபி ஸல்
என் வழிகாட்டி முஹம்மது நபி ஸல்
அவர்களைத்தான்
நான் பின் பற்றுகிறேன்.
என் இறுதி மூச்சு
இருக்கும்வரை பின்பற்றுவேன்
இறைவன் நாடினால்.