நபி தோழர்கள் யார்?

1》இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர்யார்?

● விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)

2》 இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தோழர் யார்?

● விடை :காலித் பின் வலீத் (ரலி)

3》முதலில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?

● விடை: கதீஜா(ரலி)

4》பிலால்(ரலி)அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர்யார்?

● அபூ பக்கர் (ரலி)

5》 ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயத்தில்குறைஷிகளிடமிருந்து வந்த குதிரைப் படைக்குத் தலைமைவகித்தவர் யார்?

● விடை: காலித் பின் வலீத்(ரலி)

6》 இறை வசனங்கள் அருளப்படும்போது அதை எழுதஅமைக்கப்பட்ட குழுவில் தலைமை வகித்தவர் யார்?

● விடை : ஸைது (ரலி)

7》 அகழ்ப் போரில் அகழ் வெட்டும் யோசனையளித்த நபித்தோழர் யார்?

● விடை : ஸல்மானுல் ஃபாரிஸீ (ரலி)

8》நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது உடன் சென்றதோழர் யார்?

● விடை : அபூபக்ரு(ரலி)

9》தொழுகைக்கு முதல் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர்யார்?

● விடை : பிலால்(ரலி)

10》முஹர்ரம் பத்து அன்று உயிர் நீத்த நபி (ஸல்) அவர்களின்உறவினர் யார்?

● விடை : ஹுஸைன்(ரலி)

11》இஸ்லாத்தை ஏற்பதை மஹராக வழங்க சம்மதித்தநபித்தோழர் யார்?

● விடை : அபூதல்ஹா(ரலி)

12》தனக்கு மிகவும் விருப்பமான தோட்டத்தை தர்மமாகவழங்கியவர் யார்?

● விடை : அபூதல்ஹா(ரலி)

13》நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தமுதல் கலீஃபா யார்?

● விடை : அபூபக்ரு (ரலி)

14》நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்குமுன் மதீனாவுக்குஇஸ்லாத்தை எத்திவைக்கஅனுப்பப்பட்ட நபித்தோழர் யார்?

● விடை : முஸ்அப் இப்னு உமைர்(ரலி)

15》நபி (ஸல்) காலத்தில், இஸ்லாத்தை முதலில் ஏற்ற சிறுவர்யார்?

● விடை : அலீ (ரலி)

16》நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த இறுதிவேளையில்தொழவைத்த நபித்தோழர் யார்?

● விடை : அபூபக்ரு(ரலி)

17》உஹதுப் போரில் முஸ்லிம்களையும், முஅத்தாப் போரில்எதிரிகளையும் கதிகலங்கச்செய்தவர் யார்?

● விடை : காலித் பின் வலீத் (ரலி)

18》ஓர் ஆட்டையாவது வலிமாவாக வழங்குமாறு நபி (ஸல்)அவர்கள் கூறிய நபித்தோழர் யார்?

●விடை : அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)

19》இதில் எந்த நபித்தோழரைக் கஃபனிட முழுமையான ஆடைஇருக்கவில்லை?

● விடை : முஸ்அப் (ரலி)

20》நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தில் யாருடையகாலடியோசையைக் கேட்டார்கள்?

● விடை : பிலால் (ரலி)

21》நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைப்போதிக்க நபித்தோழர்களோடு ஒன்றுகூடிய இடம் எது?

● விடை : தாருல் அர்கம்

22》எந்தக் கலீஃபாவின் ஆட்சியில் ஸ்பெயினில் இஸ்லாம்பரவியது?

● விடை: உஸ்மான்(ரலி)

23》ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த நபி(ஸல்) முதலில்தங்கியிருந்த வீட்டின் அன்சாரி தோழர் பெயர் என்ன?

● அபூ அய்யூப்(ரலி)

24》நபி(ஸல்) அவர்களின் இறுதி நாட்களில், அவர்களை கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற இரு நபித் தோழர்கள் யாவர்?

● ஃபழ்ல் இப்னு அப்பாஸ் & அலீ(ரலி)

25》ஆயிஷா(ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தஅடிமைப்பெண்ணின் பெயர்?

● விடை: பரீரா(ரலி)

26》அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களின்தாயார் பெயர் என்ன?

● விடை : ஸுமைய்யா(ரலி)

27》நூறு ஒட்டகங்களுக்காக நபி(ஸல்) அவர்களைக் கொலைசெய்ய நினைத்தவர் யார்?

● விடை : ஸுராக்கா(ரலி)

28》நபிப்பள்ளிவாயில் தூணில் கட்டி வைக்கப்பட்டு, பின்னர்இஸ்லாத்தைத் தழுவியவரின் பெயர் என்ன?

● விடை : துமாமா(ரலி)

29》நபி (ஸல்) காலத்தில், இஸ்லாத்தை முதலில் ஏற்ற சிறுவர்யார்?

● விடை : அலீ (ரலி)

30》மிகச் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்த இரண்டாவது கலீஃபாஅவர்கள் பெயர் என்ன?

● விடை : உமர் (ரலி)

31》வட்டி தடை செய்யப்பட்ட போது நபி (ஸல்) அதைத் தள்ளுபடிசெய்து துவக்கிய அவகளின் உறவினர் பெயர்?

● விடை : அப்பாஸ் (ரலி)

32》முஸைலமாவினால் கைது செய்யப்பட்டு, அவர் அவையில்கொல்லப்பட்ட நபித்தோழர் யார்?

● விடை : ஹபீப் (ரலி)

33》
அபூஜஹலின் மகன் பெயர் என்ன?

● விடை : இக்ரிமா (ரலி)